காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சந்தித்துப் பேசியுள்ளார்.
டெல்லியில் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்துப் பேசியதாக கிரண் ரிஜிஜு தமது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது இருவரும் தங்களது அரசியல் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதாகவும் அதில் கிரண் ரிஜிஜு குறிப்பிட்டுள்ளார்.