கலவரங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை என N.C.E.R.T. எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி தெரிவித்துள்ளார்.
12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடநூலில் அயோத்தி குறித்த பாடத்தில், பாபர் மசூதி இடிப்பு குறித்த தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள N.C.E.R.T. இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி, மாணவ பருவத்தில் கலவரம், வன்முறை குறித்து கற்பித்தால் வெறுப்புணர்வுதான் ஏற்படுமெனவும், தாங்கள் நேர்மறை எண்ணம் கொண்ட சமூகத்தை உருவாக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.