அமெரிக்க மெக்சிகோ எல்லையில் புலம்பெயர் மக்களை கடத்தி வந்த கும்பலை சிறப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
மெக்சிகோ எல்லையில் புலம்பெயர் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை குறிவைத்து சில கும்பல் கடத்தி செல்வதாக எல்லைப் பாதுகாப்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சோதனை மேற்கொண்டபோது நிற்காமல் சென்ற காரை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர்.
மேலும் முக்கிய சாலைகளில் சோதனை மேற்கொண்டபோது காரில் கடத்தி செல்லப்பட்ட மக்களை அதிகாரிகள் மீட்டு கடத்தல் கும்பலை சிறையில் அடைத்தனர்.