மெக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்ட 19 பேர் வெப்ப அலைகாரணமாக உயிரிழந்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுமையான வெப்பம் காணப்பட்டு வரும் மெக்கா பகுதியில் 48 டிகிரியையும் தாண்டி வெப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், புனித யாத்திரை மேற்கொண்ட 19 பேர் கடுமையான வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் ஜோர்டான் மற்றும் ஈரான் நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் உயிரிழந்தாரின் உடல்களை மீட்கும் பணியில் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.