பிரேசிலில் கருக்கலைப்பு தடை சட்ட மசதோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் போராட்டம் நடத்தினர்.
பெண்கள் கருத்தரித்த நாளில் இருந்து 22 வாரங்கள் கழித்து கருக்கலைப்பு செய்தால் அது கொலை செய்யப்பட்டதற்கான தண்டனை வழங்கும் வகையில் பிரேசில் அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இந்த சட்டத்திற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாவோ பாவுலோ பகுதியில் ஏராளமான பெண்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர்.
அப்போது எதிர்ப்பு பதாகைகள் ஏந்தியபடியும், சட்டத்திற்கு எதிரான முழக்கங்களை முழங்கியபடியும் பெண்கள் பேரணி நடத்தினர்.