மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.
அதன் படி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ஒரு நாள் போட்டியில் இந்தியா – தென் ஆப்ரிக்க அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 265 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 37.4 ஓவரில் 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.