பீகார் மாநிலம் பாங்காவில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட உணவில், பாம்பின் உடல் பாகங்கள் இருந்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், அந்த உணவை சாப்பிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
உணவின் தரம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பல முறை புகாரளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாங்கா மாவட்ட ஆட்சியர் Anshul Kumar உள்ளிட்ட அதிகாரிகள் அக்கல்லூரியில் விசாரணை மேற்கொண்டனர்.