சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, பத்ராசனம் யோகா செய்முறை குறித்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, உலகம் முழுவதும் யோகா தொடர்பான சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், பாதஹஸ்தாசனத்தின் செய்முறையையும், அதன் பலன்களையும் கூறும் வகையிலான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்டிருந்தார்.
அதன் தொடர்ச்சியாக , பத்ராசனம் யோகா செய்முறை குறித்த வீடியோவை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பத்ராசனம் யோகா செய்வதன் மூலம் மூட்டுகள் வலுவடையும் என்றும், முழங்கால் வலி குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.