மேற்கு வங்க ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே வாரிய தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய வர்ம சின்ஹா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரக்கு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், பயணிகள் ரயிலின் கார்டு உள்ளிட்டோர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
இந்த விபத்திற்கு மனித தவறே காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார். சிக்னலை பின்பற்றாமல் சரக்கு ரயில் சென்றதே விபத்திற்கு காரணம் என்றும் அவர் கூறினார்.