இந்தியா, அமெரிக்க இடையேயான உறவு மேலும் வலுவடையும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இந்தியா வந்துள்ளார் . அவரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டெல்லியில் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
முக்கிய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என முடிவு செய்துள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.