உத்தரப்பிரதேசம், பீகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!
Aug 23, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரப்பிரதேசம், பீகாருக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி!

ரூ.20,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பிஎம் கிசான் திட்டத்தின் 17வது தவணையைப் பிரதமர் மோடி விடுவிக்கிறார்!

Web Desk by Web Desk
Jun 17, 2024, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி  ஜூன் 18-19 தேதிகளில்  பயணம் மேற்கொள்ள உள்ளார். பீகாரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைப் பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ஜூன் 18 மாலை 5 மணியளவில் விவசாயிகள் கெளரவிப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார்.

இரவு 7 மணியளவில் தசாஸ்வமேத் படித்துறையில் கங்கை ஆரத்தியைப் பிரதமர் மோடி பார்வையிடுவார். இரவு 8 மணியளவில் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அவர் பூஜையும் தரிசனமும் செய்கிறார்.

ஜூன் 19 காலை 9.45 மணியளவில் தொன்மையான நாளந்தாவுக்கு செல்லும் பிரதமர் மோடி காலை 10.30 மணியளவில் பீகாரின் ராஜ்கீரில் நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தைத் திறந்துவைக்கிறார். மேலும்  இந்நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி,

மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றபின், விவசாயிகள் நலனில் அரசின் உறுதிப்பாட்டை எதிரொலிக்கும் விதமாக பிஎம் கிசான் நிதியின் 17-வது தவணைத் தொகையை விடுவிப்பதற்கு ஒப்புதல் அளிக்கும் முதலாவது கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்டார்.

இந்த உறுதிப்பாட்டின் தொடர்ச்சியாக, பிஎம் கிசான் கெளரவிப்பு நிதியின் கீழ் 17-வது தவணையை நேரடிப் பயன் பரிமாற்றத்தின் மூலம், 9.26 கோடி விவசாயப் பயனாளிகளுக்கு ரூ. 20,000 கோடிக்கும் அதிகமான தொகையைப் பிரதமர் மோடி விடுவிக்கிறார்.

பிஎம் கிசான் கெளரவிப்பு நிதியின் கீழ் இதுவரை 11 கோடிக்கும் அதிகமான தகுதியுள்ள விவசாயக் குடும்பங்கள் ரூ. 3.04 கோடிக்கும் அதிகமான தொகையைப் பெற்றுள்ளனர்.

இந்த நிகழ்வின்போது சுய உதவி குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் அதிகமான பெண்களுக்கு விவசாயத் தோழிகள் என்ற சான்றிதழ்களையும் பிரதமர் வழங்குகிறார்.

துணைத் தொழிலாளர்களாக விவசாயத் தோழிகள் பயிற்சியும் சான்றிதழும் வழங்கி கிராமப்புறப் பெண்களுக்கு அதிகாரமளித்து ஊரக இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். “லட்சாதிபதி சகோதரி” திட்ட நோக்கத்துடனும் இந்தச் சான்றிதழ் வகுப்பு இணைந்துள்ளது.

பீகாரில் பிரதமர்

பீகாரின் ராஜ்கீரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தைப்  பிரதமர் திறந்துவைக்கிறார்.

இந்தப் பல்கலைக்கழகம் இந்தியா மற்றும் கிழக்காசிய உச்சிமாநாட்டு நாடுகளின் கூட்டான ஒத்துழைப்பில் உருவாகியுள்ளது. தொடக்க விழாவில் 17 நாடுகளின் தூதரகத் தலைவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த வளாகத்தில் சுமார் 1900 இருக்கைகள் கொண்ட 40 வகுப்பறைகளுடன் இரண்டு வளாகப் பகுதிகள் உள்ளன. இது ஒவ்வொன்றும் 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்குகளைக் கொண்டுள்ளது.

இங்கு சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய மாணவர் விடுதி உள்ளது.  சர்வதேச மையம், 2000 பேர் அமரக்கூடிய ஆம்பி தியேட்டர், ஆசிரியர் மன்றம்  விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளையும் இது கொண்டுள்ளது.

இந்த வளாகம் ஒரு ‘நிகர பூஜ்ஜிய’ பசுமை வளாகமாகும். சூரிய மின்சக்தித் திட்டம், வீட்டு மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு திட்டம், கழிவுநீரை மீண்டும் பயன்படுத்துவதற்கான நீர் மறுசுழற்சி ஆலை, 100 ஏக்கர் நீர்நிலைகள் மற்றும் பல சுற்றுச்சூழல் நட்பு வசதிகளுடன் இது தன்னிறைவானது.

இந்தப் பல்கலைக்கழகம் வரலாற்றுடன் ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட பழைய  நாளந்தா பல்கலைக்கழகம், உலகின் முதல் குடியிருப்புப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2016 ஆம் ஆண்டில், நாளந்தாவின் இடிபாடுகள் ஐ.நா பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டது.

Tags: BiharPM Modi to visit Uttar Pradesh
ShareTweetSendShare
Previous Post

கோயில்களில் புகுந்து நகை திருடியவர் சிறையில் அடைப்பு!

Next Post

பாலியல் புகார் : விசாரணைக்கு ஆஜரானார் எடியூரப்பா!

Related News

டெல்லியில் தேசிய விண்வெளி தின விழா – சுபான்ஷு சுக்லா பங்கேற்பு!

சென்னை ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீர் – பொதுமக்கள் அவதி!

ஆண்டிபட்டி அருகே அரசு பள்ளி வளாகத்தில் சடலமாக கிடந்த ஆட்டோ ஓட்டுநர் – காவல்துறை விசாரணை!

திருப்பூரில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பனியன்கள் பறிமுதல்!

செங்கம் அருகே விபத்தை ஏற்படுத்திய வேனின் கண்ணாடியை உடைத்த பொதுமக்கள்!

ஆவணி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர்!

சென்னையில் மின்சாரம் தாக்கி பெண் தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதலா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

டிக்-டாக் செயலி மீதான தடை நீக்கப்படுமா? – மத்திய அரசு விளக்கம்!

சென்னையில் நடைபெற்ற கலாம் 2047 விழா – ராம சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஊடுருவல்காரர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்க மாட்டோம் – பிரதமர் மோடி உறுதி!

குடியரசு துணை தலைவர் தேர்தல் – 68 வேட்புமனுக்களில் 66 நிராகரிப்பு!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை!

ஒழுங்கீனமாக நடந்த தவெக மாநாடு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

வரும் 30-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies