திமுகவின் பி டீமாக செயல்படும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுக வெற்றிபெறவே இடைத்தேர்தலிலிருந்து ஒதுங்கி நிற்கிறார் என அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் விமர்சித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமமுக நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்ற பிறகு டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுகவுடன் அமமுக சேர்வது என்பது சாத்தியமாகாது என்றும், மீண்டும் ஒன்றிணைவோம் என்கிற பேச்சுக்கே இடமில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்துள்ளதற்கு காரணம், தவறானவர்களின் கைகளில் இரட்டை இலை இருப்பதை மக்கள் புரிந்துகொண்டு புறம் தள்ளிவிட்டார்கள் என டிடிவி தினகரன் கூறினார். மேலும், தோல்வி பயத்தாலேயே அதிமுக இடை தேர்தலில் போட்டியிடவில்லை என அவர் விமர்சித்தார்.