விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகை கடந்த ஆண்டு முதல் வழங்கப்படவில்லை என தேசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேசிய ஜூனியா் கிக் பாக்சிங் போட்டியில் தமிழக அணி 48 பதக்கங்களை பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
மேலும் ஹங்கேரியில் நடைபெறவுள்ள உலக கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் இந்த வீரர் வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர்.
இதுகுறித்து சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை நிவேதா, கடந்த ஆண்டு முதல் கிடைக்காமல் இருக்கும் ஊக்கத்தொகை கிடைத்தால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக பேசிய வீராங்கனை ஜனனி, ஊக்கத்தொகை கேட்டுக்கொண்டே இருக்கிறோம், ஆனால் இன்னும் கிடைக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.