ரஷ்ய அதிபர் புதின் 24 வருடங்களுக்குப் பிறகு இன்று வடகொரியா செல்கிறார்.
வடகொரிய அதிபர் Kim Jong Un-னின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக இன்று வடகொரியா செல்லவுள்ளார்.
அங்கு நடைபெற உள்ள முக்கிய மாநாடு ஒன்றில் புதின் பங்கேற்கவுள்ளதாகவும், அந்த மாநாட்டில், இரு நாடுகளுக்கு இடையே ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதனை மறுத்துள்ள ரஷ்ய அரசு, புதினின் வடகொரிய பயணம் முற்றிலும் நட்பு ரீதியான பயணம் எனத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக கடந்த 2000-ம் ஆண்டு வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் புதின், 24 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தான் மீண்டும் வடகொரியா செல்கிறார். வடகொரிய பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 19, 20-ம் தேதிகளில் புதின் வியட்நாம் செல்லவுள்ளார்.