தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடலில் குளித்துக்கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.
காமராஜ் நகரை சேர்ந்த 15 பேர் வேம்பார் கடற்கரைக்கு சென்றுள்ளனர். அப்போது கடலில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சாதனா கடல் அலையில் சிக்கியுள்ளார்.
சிறுமியை காப்பாற்ற முயன்ற டேனி என்ற இளைஞரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. இதில் இருவரும் உயிரிழந்த நிலையில், சடலத்தை மீட்டு போலீசார் விசராணை நடத்தி வருகின்றனர்.