பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார்.
தான் தயாரித்துள்ள ”கண்ணப்பா” திரைப்படம் வெற்றிபெறுவதற்காக, நாடு முழுவதும் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், நடிகர் மோகன்பாபு வழிபாடு செய்து வருகிறார். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் அவர் மனைவியுடன் தரிசனம் செய்தார்