சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே, இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்திற்கு ஆட்டோ பந்தயமே காரணம் என தற்போது தெரியவந்துள்ளது.
வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில், அருமந்தை பகுதியில் கடந்த 15-ம் தேதி அடுத்தடுத்து 3 இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர்.
எட்டிற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் பந்தயத்தில் ஈடுபட்ட நிலையில், வேடிக்கை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அந்த ஆட்டோக்களை பின்தொடர்ந்து சென்றவர்களே விபத்தில் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்து குறித்து செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.