திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, முட்டைகளை ஏற்றிச் சென்ற வேனும், அரசுப்பேருந்தும் விபத்துக்குள்ளானதில், முட்டைகள் சாலையில் கொட்டி வீணாகின.
தாராபுரத்தில் இருந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான முட்டைகளை ஏற்றிக்கொண்டு, வேன் ஒன்று பல்லடம் நோக்கி பயணித்தது.
ராஜபாளையத்திலிருந்து கோவை நோக்கி சென்று அரசு பேருந்து, முன்னால் சென்ற முட்டை வேனை முந்த முயன்றது. அப்போது உரசியதாக கூறப்படுகிறது.
இதனால் கட்டுபாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததில் முட்டைகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.