டெல்லியில் கோடை வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
கீதா காலனி, குசும்பூர் பஹாடி, ஓக்லா உள்ளிட்ட பகுதிகளில் டேங்கர் லாரி மூலம் விநியோகம் செய்யப்படும் தண்ணீரை பொதுமக்கள் முண்டியடித்து பிடித்து சென்றனர். மேலும், முறையாக தண்ணீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.