சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், டெல்லி மாநகராட்சி சார்பில் யோகா முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
லோதி கார்டன், டல்கடோரா ஸ்டேடியம், நேரு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு யோகா பயிமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் அதிகாலை
முதலே மக்கள் ஆர்வத்துடன் வந்து யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.