தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வருவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சாதி மறுப்பி திருமணம் செய்து வைத்ததற்காக, நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், வருகிற சட்டப்பேரவை கூட்டத்தொடரில், ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், சாதியப் படுகொலைகளைத் தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வலியுறுத்தினார்.