சென்னையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளின் உரிமையாளர்களிடம் இருந்து இந்த ஆண்டு மட்டும் 43 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில மாதங்களாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. திருவொற்றியூரில் பெண் ஒருவரை மாடு முட்டி சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியது.
இதனையடுத்து மாட்டை கைபற்றிய மாநகராட்சி அதிகாரிகள் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டு தொழுவத்திற்கு கொண்டு சென்று கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாட்டு தொழுவத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், இந்த ஆண்டில் மட்டும் சாலைகளில் சுற்றித்திரிந்த ஆயிரத்து 117 மாடுகள் கைபற்றப்பட்டு உரிமையாளர்களிடம் இருந்து 43 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மாடுகளை சாலையில் விடாமல் தொழுவத்தில் வைத்து பராமரிக்குமாறும் அறிவுறுத்தினார்.