அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பசுமை அறக்கட்டளை சார்பில், இலவசமாக மரக்கன்றுகள் தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டன.
கிரீன் பவுண்டேஷன் நிறுவனர் அன்பரசி தலைமையில், கிரீன் பவுண்டேஷன் ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் மற்றும் பரமசிவம் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஆலம், அரசன், இலுப்பை, புங்கன் உள்ளிட்ட 2 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
இதில் கிரீன் பவுண்டேஷன் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.