பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவின் தாயார் பாவானி ரேவண்ணாவுக்கு பெங்களூரூ உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை சிறப்பு பிரிவு போலீசார் கடந்த 6-ந்தேதி முதல் 10-ந்தேதி விசாரணை நடத்தினர்.
இதனிடையே வீட்டில் பணிப்பரிந்த பெண்ணை கடத்த முயன்றதாக பிரஜ்வல் ரேவண்ணா தாயார் பவானி ரேவண்ணா மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவர் முன்ஜாமீன் கோரி பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.