திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூரில் பெண்ணை எருமை மாடு முட்டிய விவகாரம் தொடர்பாக மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருவொற்றியூரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, உறவினருக்கு உணவு கொடுக்கச் சென்ற மதுமிதா என்பவரை எருமை மாடு முட்டி தரதரவென இழுத்துச் சென்றது.
இதில் படுகாயமடைந்த மதுமிதா, தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணை மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை வந்து பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் சென்னை மாநகராட்சி மண்டலம் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.