தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு த.மா.கவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகரில், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவோருக்கு பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழுக்கங்களை எழுப்பினர்.