திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் செப்டம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானத்தின் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 20-ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்றும், முன்பதிவு செய்பவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கைப்பேசி மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மே 20 முதல் 22-ஆம் தேதி வரை முன்பணம் செலுத்தி பக்தர்கள் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.