தென் கொரியாவுக்குள் வடகொரியா ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் பதற்றம் நிலவியது.
இரு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வரும் நிலையில், தென் கொரிய எல்லையைத் தாண்டி வடகொரியா ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.
சுதாரித்துக் கொண்ட தென்கொரியா ராணுவ வீரர்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதனால் வடகொரியா ராணுவ வீரர்கள் பின்வாங்கினர். இரண்டு வாரத்துக்கு முன்பும் இதேபோல வடகொரியா ராணுவ வீரர்கள் தென்கொரியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்றது குறிப்பிடத்தக்கது.