ஆந்திர துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பவன் கல்யாண் பொறுப்பேற்பதற்காக தலைமைசெயலகம் சென்ற போது ஜன சேனா கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் என்டிஏ கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
21 இடங்களில் வெற்றி பெற்ற ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு துணை முதல் பதவி வழங்கப்பட்டது.இந்நிலையில் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பவன் கல்யாண் பொறுப்பேற்பதற்காக தலைமைசெயலகத்திற்கு சென்றார்.
அப்போது சாலையின் இருபுறமும் திரண்ட ஜன சேனா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனைத்தொடரந்து அவர் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.