பீகாரில் ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் இடிந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பக்ரா ஆற்றின் அராரியா பகுதியில் 12 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது, கடந்த பல மாதங்களாக நடைபெற்று வந்த பால கட்டுமாணப்பணிகள் அண்மையில் நிறைவடைந்தது.
இந்நிலையில் திறப்பு விழாவிக்கு தயாராக இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. ஒப்பந்ததாரர் மற்றும் அரசு அதிகாரிகள் அலட்சியத்தால் பால கட்டுமாண பணிகள் சரிவர நடைபெறவில்லை என்றும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.