ஈரோட்டில் காருக்கு சிஎன்ஜி எரிவாயு பொருத்தும் தனியார் நிறுவனத்தைக் கண்டித்து வாடிக்கையாளர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்து தனது காருக்கு சிஎன்ஜி எரிவாயு பொருத்தியுள்ளார்.
ஆனால், கார் அடிக்கடி பழுது ஏற்பட்டுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்தும், சம்பந்தப்பட்ட நிறுவனம் பழுது நீக்கித்தரவில்லை எனக்கூறி, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தனியார் நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் இருதரப்பினரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு கண்டனர்.