விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு, அத்தொகுதியில் தங்கியுள்ள 9 தமிழக அமைச்சர்களை வெளியேற்ற வேண்டுமென பாமக வழக்கறிஞர் பாலு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் புகாரளித்த பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.