தாய்லாந்தில் தன் பாலின திருமணத்திற்கு அனுமதி அளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மக்களவை கூட்டத்தில் கடந்த மார்ச் மாதம் தன் பாலின திருமணத்திற்கான சட்டம் தீர்மாணத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், தன் பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கும் மசோதா அந்நாட்டின் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டம் அமலுக்கு வந்த காரணத்தால், அந்நாட்டிலுள்ள தன் பாலினத்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.