யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது! - தமிழிசை சௌந்தரராஜன்
Mar 20, 2026, 05:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது! – தமிழிசை சௌந்தரராஜன்

Murugesan M by Murugesan M
Jun 19, 2024, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாஜக குறித்து நேர்மறையாக தான் கூறும் கருத்துகள் மாநிலத் தலைவருக்கு எதிராக கூறப்பட்டதைப் போன்று சில நேரங்களில் திரித்துக் கூறப்படுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பாஜக தமிழக மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் எல்.முருகன், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா மற்றும் மையக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் பல ஏழை மாணவர்களின் நம்பிக்கைக்குரிய தேர்வாக உள்ளது என்றார். யார் நினைத்தாலும் நீட்டை தடுக்க முடியாது எனவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச். ராஜா, பள்ளிகளில் சாதி பிரச்சனைகளை தவிர்க்க, தமிழக அரசுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு வழங்கிய பரிந்துரைகள் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிராக உள்ளது என்றார். நெற்றியில் திலகத்துக்கு தடை என்றால் ஹிஜாப்புக்கும் தடை விதிக்கப்படுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனவே, நீதிபதி சந்துருவின் பரிந்துரைகளை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும் என அரசிடம் பாஜக சார்பில் கோரிக்கை வைக்க உள்ளதாக எச்.ராஜா தெரிவித்தார்.

Tags: No one can stop the stretch! - Tamilisai Soundararajanதமிழிசை சௌந்தரராஜன்
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Next Post

39 தொகுதிகளிலும் நன்றி அறிவிப்பு கூட்டம்! – அண்ணாமலை

Related News

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

மேலூர் தொகுதி சுயேட்சை வேட்பாளர் முருகன் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஹோர்முஸ் நீரிணையை முடக்கும் ஈரானின் முயற்சி முறியடிப்பு – அமெரிக்கா அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விளாத்திகுளம் மாணவியின் உடல் தகனம் – அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி!

திமுக அமைத்த கூட்டணி குளறுபடியில் உள்ளது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

கூடலூர் அருகே செல்ஃபி எடுக்க முயன்றபோது 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர்!

திருச்சி திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தர்ம முனீஸ்வரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு – சிசிக்சைக்கு பின் மீண்டும் விசாரணை!

எடப்பாடியில் விடிய விடிய மழை – வட்டாட்சியர் அலுவலகத்தில் மழைநீர் தேக்கம்

சேலத்தில் திடீர் மழை – சாயக்கழிவு திறந்து விடப்பட்டதால் விவசாயிகள் கொந்தளிப்பு!

மதுரையில் கொட்டி தீர்த்த கனமழை – சாலைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி!

3-வது குழந்தையை பெற்றெடுக்கும் பெண்ணுக்கு ஓராண்டு மகப்பேறு விடுமுறை – சென்னை உயர் நீதிமன்றம்

அமைச்சர் பதவி வேண்டாம் என்றால் மட்டுமே சீட் – துரைமுருகனுக்கு திமுக மேலிடம் நிபந்தனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies