“தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 39 தொகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடத்தப்படும்” என, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் மாநில பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற மையக்குழு கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தமிழகத்தின் பல இடங்களில் கள்ளச்சாராயம் புழக்கத்தில் இருக்கிறது” என குற்றம் சாட்டியுள்ள, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “கள்ளச்சாராய இறப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், கள்ளச்சாராய பலிக்கு காரணமான அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான் மற்றும் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்