தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை, இபிஎஸ் படைத்துள்ளார்.
தனதுபடி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் அவர் 98 ஆயிரத்து 110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடியுள்ளார்.
அவரை தொடர்ந்து, சோழிங்கநல்லூர் தொகுதி தவெக வேட்பாளர் சரவணன் 96 ஆயிரத்து 780 வாக்குகள் வித்தியாசத்திலும்,
மாதவரம் தொகுதி தவெக வேட்பாளர் விஜய பிரபு 94 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றிப்பெற்றுள்ளார்.
அதேபோல், பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளர் பிரகாசம் 72 ஆயிரத்து 740 வாக்குகள் வித்தியாசத்திலும், பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய் 53 ஆயிரத்து 715 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
















