குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை - சென்னை உயர் நீதிமன்றம்
Sep 19, 2026, 03:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 5, 2026, 07:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தவெக எம்.எல்.ஏ-விடம் குதிரை பேரம் நடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தவெக ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரம் நடந்ததாக, சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ரமேஷ், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டதுடன், ரமேஷ் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் உள்ள சேதுராஜ் மற்றும் கார்த்திக்கும், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது, காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என்றும், எனவே வழக்கை சிபிஐ அல்லது வேறு சுயாதீன விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு, பொய் வழக்கு ஜோடிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், வழக்கில் தேவையான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு தரப்பிலும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஒவ்வொருவராக சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்து வருவதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள்,

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குதிரை பேரம் வழக்கின் ஒட்டுமொத்த புலன் விசாரணைக்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags: madras high courtinterim stayTVK governmentTVK MLAhorse-trading investigaion
Share
Tweet
SendShare
Previous Post

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

Next Post

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

Related News

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்; செப்.22ல் தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

தாய்மாமன் தங்க மோதிரம் சிறப்பு நலத்திட்டம்; செ.28ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies