செவித்திறனை இழந்த பாடகி அதிர்ச்சியூட்டும் பின்னணி!
Sep 13, 2025, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செவித்திறனை இழந்த பாடகி அதிர்ச்சியூட்டும் பின்னணி!

Web Desk by Web Desk
Jun 19, 2024, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனம் தெரியாத அரிய வகை செவித் திறன் குறைபாட்டால் பாதிப்படைந்திருப்பதாக, பிரபல பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் தெரிவித்துள்ளார். மேலும் ஹெட்போன்களைக் கவனமாகப் பயன்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

பிரபல பாலிவுட் பின்னணி பாடகியான அல்கா யாக்னிக், ஹிந்தி, தமிழ் உட்பட 25 மொழிகளில், சுமார் 9000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தனது இனிய குரலால் இசை இரசிகர்களை வசீகரபடுத்தி வந்தார்.

1980 மற்றும் 1990-களில் பிரபலமான ‘ஏக் தோ தீன்’, ‘சோலி கே பீச்சே கியாஹே’ உட்பட பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழில், ஓரம்போ படத்தில் ‘இது என்ன மாயம்’, ‘வாய்மை’என்ற படத்தில் ‘ கண்படும் உன் முகம்’ ஆகிய பாடல்களை பாடியிருக்கிறார்.

இரண்டு தேசிய விருதுகளுடன் 7 முறை சிறந்த பாடகிக்கான பிலிம் பேர் விருது பெற்றுள்ள அல்கா யாக்னிக், அதிலும் 1999 முதல் 2001 வரை தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் விமானப் பயணம் மேற்கொண்ட இவருக்குத் திடீரென செவித்திறன் பாதிப்படைந்துள்ளது. எந்தச் சத்தமும் கேட்க முடியாமல் போனது. இதனால் அச்சமடைந்த அல்கா யாக்னிக் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று வருகிறார். நீண்ட நாள்களாக யாருடனும் இது பற்றித் தெரிவிக்காத அல்கா, தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்ஸ்டா பக்கத்தில், சமீபத்தில் மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில்,நரம்புகளின் பாதிப்பினால், தனக்கு ஒரு அரிய வகை செவித் திறன் குறைபாடு இருப்பது கண்டறிய பட்டதாகவும், இது தனக்கு திடீர் பின்னடைவு என்றும் கூறியுள்ளார்.

அதிக சத்தம் கேட்கும் போதும், ஹெட்போன்களைப் பயன்படுத்தும்போதும், அதிக கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள அல்கா யாக்னிக், எல்லோரும் தமக்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரபல பின்னணி பாடகி அல்கா யாக்னிக்க்கு வந்திருக்கும் இந்த அரிய வகை செவித் திறன் குறைபாடு நோயானது, அதிகளவு சத்தத்தை கேட்பதாலும், நோய்த்தொற்று பாதிப்பாலும், தலையில் அடிபடுதலாலும் முதுமை காரணமாகவும் போன்றவற்றால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: The shocking background of the singer who lost her hearing!
ShareTweetSendShare
Previous Post

பெண்ணிடம் செயின் பறிப்பு: கொள்ளையர்களுக்கு வலைவீச்சு!

Next Post

திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்!

Related News

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

தீபாவளி பண்டிகை – 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முதல்வர் 5 முறை வெளிநாட்டு பயணம் மேற்கொண்டபோதிலும் எந்த பயனும் இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தில் மீண்டும் என்டிஏ ஆட்சியை அமைக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

2047-ம் ஆண்டு இந்தியாவின் கனவை நினைவாக்க வேண்டும் – மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால்

இன்று மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி – பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies