புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணியை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆய்வு செய்தார்.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், தண்ணீர் குளங்களுக்கு சென்றடையும் வகையில், வாய்க்கால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கம்பன் நகர் பகுதியில் கால்வாய் தூர்வாரும் பணியை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆய்வு செய்தார். அப்போது, மாநகராட்சி நகர் நல அலுவலர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.