குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில், குடியரசுத் தலைவரின் முன்னுதாரண சேவையும், அர்ப்பணிப்பும் அனைவருக்கும் உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏழைகளுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் உதவும் அவரது சேவை தங்களைத் தொடர்ந்து வழிநடத்துவதாகவும், குடியரசுத் தலைவரின் வாழ்க்கைப் பயணம் கோடிக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அந்தப் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவரின் அயராத சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவத்துக்கு தேசம் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக் குறிப்பில் பதிவிட்டுள்ளார்.