ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
என்.மங்கலத்தைச் சேர்ந்த டெய்லர் நாகராஜன் என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா உட்பிரிவு மாறுதல் கோரி இணையத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஓரியூர் விஏஒ மாதவன், கிராம உதவியாளர் காளீஸ்வரன் ஆகியோர் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர்.
இதுதொடர்பான புகாரின் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பெற்றபோது இருவரையும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் கையும் களவுமாக கைது செய்து விசாரித்து வருகின்றனர்.