கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
சின்ன புத்தூரில் காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள தனியார் ஆலையின் அருகே நின்றிருந்த இளைஞர் போலீசாரைக் கண்டதும் தப்பியோடியுள்ளார்.
விசாரணையில் வங்கதேசத்தைச் சேர்ந்த அந்த இளைஞர் சட்டவிரோதமாக தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வங்கதேச இளைஞரை கைது செய்த காரமடை போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.