ராமநாதபுரம் மாவட்டம், பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 58-ம் ஆண்டு சமத்துவ எருது கட்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
கோயிலின் முன்பு உள்ள மைதானத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், மாடுபிடி வீரர்களுக்கு சீருடை வழங்கி எருது கட்டுவிழாவினை தொடங்கி வைத்தார்.
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், போட்டியை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.