நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு, மற்றும் தேசிய தேர்வு முகமை ஜூலை 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடத்தக் கோரி, மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல மாநில உயர்நீதிமன்றங்களில் நீட் தேர்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி, தேசிய தேர்வுகள் முகமை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்புடைய 14 மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.என். பாட்டீல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, உயர் நீதிமன்றங்களில் நீட் தேர்வு விசாரணைக்கு தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஜூலை 8-ஆம் தேதிக்குள் மத்திய அரசும், தேசிய தேர்வுகள் முகமையும் பதிலளிக்க உத்தரவிட்டனர்.