விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவத்தையொட்டி, ஸ்ரீ மீனாட்சி – சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாங்கல்ய பூஜையை தொடர்ந்து மீனாட்சி அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.