கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49-ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.
இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி 49 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 27 பேர் கள்ளக்குறிச்சியிலும், 15 பேர் சேலத்திலும், 4 பேர் விழுப்புரத்திலும், 3 பேர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். 90-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.