விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், திமுக சார்பில் அன்னியூர் சிவாவும், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சி.அன்புமணியும், நாம் தமிழ கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று வரை 24 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 26-ம் தேதி கடைசி நாளாகும்.