“யுஜிசி நெட் தேர்வு விவகாரத்தில் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்வு முகமை சார்பில், யு.ஜி.சி. நெட் தேர்வு நாடு முழுதும் கடந்த 18-ஆம் தேதி நடந்தது. இதில், பல்வேறு மாநிலங்களில் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது.
இதனால், நெட் தேர்வை ரத்து செய்த மத்திய கல்வி அமைச்சகம், புதிய தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது. இந்நிலையில், இது தொடர்பாக, டெல்லியில் பேட்டியளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,
“மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், “வரும் காலத்தில் எந்த முறைகேடுகளும் நடைபெறாமல், தரம் உயர்த்தி தேர்வுகள் நடத்தப்படும்” என்றும் உறுதியளித்தார்.