ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சிவகாளியம்மன் கோயில் வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருவாடியில் உள்ள சிவகாமி அம்மன் மற்றும் கருங்காலி அம்மன் கோயில்களில் 9-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது.
பின்னர் புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.