சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே சொர்ணமுத்தீஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டதேவி கிராமத்தில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டம் சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் தேரோட்ட நிகழ்ச்சியையொட்டி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 18 சோதனை சாவடிகள், 50-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது.